வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2021 01:04
மயிலாடுதுறை : கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்தரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்து உருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது அருள்வாக்கு இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 24 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 29ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன கும்பாபிஷேகத்திற்காக 144 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்படுகிறது யாகசாலை பூஜைக்காக 600 குருக்கள் 400 உதவியாளர்கள் என ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநிலத் தலைவர் ரவி இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் சுகாதாரத்துறை மற்றும் தருமபுர ஆதீன குருமகா சந்நிதானத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இதில் கட்டளைதாரர்கள் பக்தர்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்காக வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகின்றன குரோனா தடுப்புச்சட்டம் மற்றும் விதிகளை கடைபிடிக்காமல் ஆணையரின் அனுமதி பெறாமலும் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனவே ெகாரோனோ நோய்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை கும்பாபிஷேகத்தை தள்ளிவைத்து மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.