மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி – சோமநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மானாமதுரையில் சித்திரை திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழா தொடக்கமாக சோமநாதா் சன்னிதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகம் நடத்தி கொடிமரத்துக்கு தா்ப்பைப்புல், மலா்மாலைகள் சாற்றி தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் சமுக இடைவேளி பின்பற்றி பங்கேற்றனா்.