சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் சர்ச் தேர்த்திருவிழா நடந்தது. ஏப்.,9ல் புனித மரியன்னை கலைமணைகள், ஏசு சபை குழும அதிபர் மரியநாதன் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு மதுரை கே.புதுரர் அருட்பணி ஜெரோம் எரோணீமுஸ் தலைமையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அன்னையின் தேர்பவனி எளிமையாக நடந்தது.இன்று (ஏப்.,19) காலை 7மணிக்கு நன்றி திருப்பலி உடன் கொடியிறக்கம் நடக்கிறது.