அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அடுத்த வலசை கம்மாளபட்டியில் வண்டிக்காரர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட நொண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் இரண்டாம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து ராஜா பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோயில் மணி பீடத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.