விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் தாமிரபரணி நதியில் குளிக்க இன்று(20ம்தேதி) முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கொரோனா 2ம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு இன்று (20ம் தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. அதில் ஒன்றாக இன்று (20ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரைபாபநாசம் தாமிரபரணி நதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. தடையைமீறி நதிக்கரைக்கு யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அங்குள்ள கல்மண்டபத்தில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.