இலவச திருமணத்திற்காக விண்ணப்பங்கள்: திருச்செந்தூர் கோயில் அலுவலகத்தில் விநியோகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2012 10:06
திருச்செந்தூர்: இந்து சமய அறநிலையதுறை மூலம் நடைபெற உள்ள இலவச திருமணத்திற்கான விண்ணப்பங்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இலவச திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்ணுக்கு 4கிராம் தங்கத் தாலியும், மணமக்களுக்கு பதினைந்தாயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளது. ÷திருமணத்திற்கான விண்ணப்பங்களை இலவசமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் தகுதியானவர்கள் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் பெறவரும் போது தேவையான சான்றுகளுடன் வந்து இணை ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.