திருணம் செய்ய உள்ள தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருமண ஆராதனைக்கு ஆலயமணி ஒலித்த நாளில் இருந்தே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்புடன் நடக்க வேண்டும். நண்பர்கள் போல பழக வேண்டும். பரிவும், விட்டுக்கொடுக்கும் எண்ணமும் வேண்டும். குழந்தைகளை கடவுளுக்கு பிரியமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். அன்றாட உணவுக்காக நன்றி சொல்லவும், ஜெபத்திற்கும் நேரம் ஒதுக்கவும் வேண்டும். ஒருவரையொருவர் அதைரியப்படுத்தும் விதமாக பேசுவது கூடாது. உறவினர் தலையீடு இல்லாமல், பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும். வருமானம் அறிந்து அதற்கேற்ப செலவழிக்க வேண்டும். இத்தகைய கணவனும், மனைவியும் பாக்கியசாலிகள்.