Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் செய்யாதீர் பாக்கியசாலிகள் யார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உத்தரவு இட்டதற்கு நன்றி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
10:04


ஜார்ஜ் முல்லர் என்னும் ஆங்கிலேயர் யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை. அவரின் பிரார்த்தனையால் பலன் அடைந்தவர்கள் தேடி வந்து பணம் கொடுப்பது வழக்கம்.
கையில் பணம் இல்லாத நேரத்தில் அனாதை சிறுவர்களுக்கு விருந்தளிக்க விரும்பிய அவர் பிரார்த்தனை மட்டும் செய்தார்.
விடுதியின் பொறுப்பாளரை அழைத்து, விருந்துக்கு தயாராக இருக்கும்படி கூறினார்.
இதை அறிந்த குழந்தைகள் ஆசையுடன் காத்திருந்தனர். மேஜையில் தட்டு, கரண்டி எடுத்து வைக்கப்பட்டன. அவரவர் இடத்தில் தண்ணீரும் வைக்கப்பட்டது.
பொறுப்பாளர், ‘ முல்லருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் பிள்ளைகள் அமர்ந்தால் ஏமாந்து போவார்களே!” என்று எண்ணிக் கொண்டார்.
நேரம் கடந்ததால் பொறுப்பாளர், “ சாப்பாடு இல்லாமல் என்ன செய்வது?” என்றார்.
“கவலை வேண்டாம். உணவு அளிப்பது ஆண்டவர் பொறுப்பு. சாப்பாட்டு மணியை அடியுங்கள்” என்றார்.
அப்படியே மணி ஒலிக்க, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்  ஓடி வந்தனர்.
மனஒருமையுடன் முல்லர் பிரார்த்தித்தார். அப்போது அங்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவு இருந்தது.அதில் வந்த டிரைவர் முல்லரிடம், “ஐயா! எங்கள் முதலாளி இந்த உணவை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஓட்டலில் ஏற்பாடு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தால் விருந்து தடைபட்டதால், ஆதரவற்ற சிறுவர்களுக்கு வழங்க முடிவெடுத்தார்.
 “ஆண்டவரின் உத்தரவால் நமக்கு விருந்து கிடைத்துள்ளது. நன்றியுடன் உண்போம்” என்றார் முல்லர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar