Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எதிர்காலம் இனிதாக... மகப்பேறு தரும் குழந்தை சிவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராம நாமம் ஒரு வேதமே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
10:04


கேரளாவில் ராம  நாம கீர்த்தனை செய்வதற்காக ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. 1931 முதல் இங்கு தினமும் 12 மணி நேரம் அதாவது

காலை 6:00 – மாலை 6:00 மணி வரை இங்கு ராம நாம கீர்த்தனை நடக்கிறது. அரை மணி நேரம் பெண்களும், அடுத்த அரை மணி நேரம் ஆண்களுமாக மாறி மாறி கீர்த்தனை செய்வர். இதில் பங்கு பெற முன்பதிவு செய்வது அவசியம்.  பக்தர்களுக்கு தங்கும் அறை, உணவு இலவசம். தனியாகவோ, தம்பதியாகவோ, நண்பருடனோ அதிகபட்சமாக மூன்று நாள் இங்கு தங்கலாம். 1931 முதல் ராம நாம கீர்த்தனை நடப்பதால் இப்பகுதி எங்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் கோடிக்கணக்கான நாம ஜபங்களின் சக்தி காற்றில் பரவியிருப்பதை நம்மால் உணர முடியும்.
இங்கு வருவதன் மூலம் நீண்ட நாள் மன உளைச்சல் தானாக குணமாகும். மனசஞ்சலம், உறுதியின்மை சரியாகும். நிம்மதி பெற விரும்புவோருக்கு  ஒருமுறை வந்தாலும் உடனடி பலன் கிடைக்கும். கடந்த 10 மாதங்களில்  நடந்த ஆன்மிக ஆராய்ச்சியின் முடிவு இது.

இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பித்தவர் வீரசிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸரின் வம்சாவளியைச் சேர்ந்தவர். இல்லத் துறவியான இவர், நாடெங்கும் நடந்தே பயணித்தவர். ராம நாம கீர்த்தனையை தன் தந்தையிடம் இருந்து பெற்றவர். தன் வாழ்நாளில் சில கோடி முறை ராமநாமம் ஜபித்தவர். இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி.

இவரது சீடராக இருந்தவர் தான் விசிறிச் சாமியார் என்னும் யோகிராம் சுரத்குமார். மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் ஆஸ்ரமம் உள்ளது.  உலககெங்கும் இருந்து ராம பக்தர்கள் பங்கேற்கின்றனர்.  

இங்கு ஜபிக்கப்படும் ராம நாம கீர்த்தனை –
ஓம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா  
முகவரி: ஆனந்த ஆஸ்ரமம், ஆனந்த ஆஸ்ரமம் போஸ்ட், காஞ்சன்கோடு, கேரளா – 671 523
Anandashram, Anandashram P.O., Kanhangad – 671531
Dist. Kasaragod, Kerala, India.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar