Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம நாமம் ஒரு வேதமே திருப்புமுனை உண்டாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகப்பேறு தரும் குழந்தை சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
10:04

குடும்பம் விளங்க ஒரு குழந்தை இல்லையே என ஏங்குவோர் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் குறை போக்கி மகப்பேறு அளிக்கும் தலமாக தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சந்தான சுந்தரேஸ்வரரை தம்பதியராக வழிபட்டு பரிகார பூஜை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.   


 பூஞ்சோலையாக இருந்த கொத்தங்குடி பகுதியில் பகவான் கிருஷ்ணரும், அர்ஜூனனும் தர்ம சாஸ்திரம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலை மலையாக பூக்கள் குவியத் தொடங்கின. இந்த பூக்களைக் கொண்டு இங்குள்ள சிவனுக்கு நம்மை விட வேறு யாரால் பூஜை செய்து விட முடியும் எனக் கேட்டான் அர்ஜூனன். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருந்த பீமனைக் கண்டார் கிருஷ்ணர். மனதிற்குள்ளேயே அவன் சிவபூஜை செய்வதையும், அவனது மனோசக்தியால் அங்கு பூக்கள் குவிவதையும் உணர்ந்தார். அர்ஜூனனுக்கு விஷயத்தை சொன்னதோடு, ‘‘ உடல் வலிமையை விட மனவலிமையே பக்திக்கு அவசியம். உள்ளன்புடன் செய்யும் பூஜையை கடவுள் விருப்பமுடன் ஏற்பார்’’ என்றும் தெரிவித்தார். பீமன் மானசீகமாக சிவபூஜை செய்ததால் ‘பீமேஸ்வரம்’  என இத்தலம் பெயர் பெற்றது. இங்கு சுவாமிக்கு மாலை அணிவிப்பதை விட உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. தற்போது கொத்தங்குடி எனப்படும் இங்கு சுவாமி சுந்தரேஸ்வரர் என்றும், அம்மன் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகின்றனர். பக்தர்களின் குறைகளை அம்மன் எடுத்துரைக்க, அதனை சுவாமி செவி சாய்த்துக் கேட்பதால் இங்குள்ள சிவலிங்கம் சற்று சாய்வாக உள்ளது.
மகப்பேறு அருளும் சந்தான சுந்தரேஸ்வரர் என்னும் குழந்தை சிவன் இக்கோயிலில் இருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள் இவரை சிவாச்சாரியார் மூலம் பெற்று மனைவியின் மடியில் வைத்து பிரார்த்திக்க வேண்டும். பின்னர் தொட்டிலில் இட்டு தாலாட்ட வேண்டும். இதுவே முதல் கட்ட பரிகாரம். இதன்பின் வேண்டுதல் நிறைவேறி மகப்பேறு கிடைத்ததும், ஓராண்டுக்குள் குழந்தையுடன் கோயிலுக்கு  வர வேண்டும். மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டிலில் குழந்தையை கிடத்தி  நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இதுவே இரண்டாம் கட்ட பரிகாரம். இந்த பரிகார பூஜைகள் தினமும் காலை 9:00 – 10:30 மணி, மாலை 6:30 – 7:30 மணிக்குள் நடக்கும். சனிக்கிழமை காலையில் ராகுகாலம் என்பதால் பரிகார பூஜை கிடையாது.         
1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் ஞானசம்பந்தர் தேவாரத்தில் வைப்பு தலமாக உள்ளது. சிதிலமாகி நுாறாண்டுக்கும் மேலாக பூஜையின்றிக் கிடந்த இக்கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டுள்ளது.    
எப்படி செல்வது: தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் 14 கி.மீ,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar