பதிவு செய்த நாள்
21
ஏப்
2021
04:04
தஞ்சாவூர், கும்பகோணத்தில், தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசுவாமி கோவிலில் ராமநவமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசாமி கோவிலில், மூலவர் மற்றும் உற்சவர் ராமபிரான் பட்டாபிஷேக மூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு ராமநவமி விழாவை எளிய முறையில் நடத்திட கோவில் நிர்வாகம் முன் வந்தது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி பத்து நாள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடந்தது . முக்கிய விழாவான இன்று(21ம் தேதி) நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் காலை உற்வருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பின்னர் சிறிய ரதரோஹனத்தில் ராமபிரான், சீதை, லெட்சுமணனோடு எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது. இதில் குறைளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர்.