தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளத்தில் ஸ்ரீ ராதா, ருக்மணி, சமேத நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு புதிதாக கருட வாகனம் செய்யப்பட்டு ஆன்மீக முறைப்படி, கருட வாகன சுவாமியின் கண் திறப்பு வைபவம் கோவிலில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் முன்னதாக பக்தர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.