கள்ளக்குறிச்சி; நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் சிவன் கோவிலும், ராமர் கோவிலும் அருகருகே இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். நுாற்றாண்டை கடந்து பெருமை பெற்ற சீத்தா லஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் நேற்று நடந்தது.அதிகாலை கோ பூஜையுடன் தொடங்கி, சிவன் கோவிலில் பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்த பின், ராமர் கோவிலில் மூலவர் உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.சுவாமிகளுக்கு சர்வ அலங்காரம் செய்த பின், விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்கப்பட்டது. ஸ்ரீராம பக்தர்கள், நாம சங்கீர்த்தன பஜனை செய்தனர். சீதை லட்சுமணர் அனுமன் கோதண்டராமர் சுதர்சணர் சுவாமிகளுக்கு அலங்கார தீபங்கள் காண்பிக்கப்பட்டது.உபச்சார பூஜைகளுக்கு பின் மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்தனர்.