உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் நாளை சனி மகா பிரதோஷம்நடக்க உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிப்பிரதோஷ நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.இருப்பினும் கோயில்களில் ஆகம விதிப்படி அந்தந்த காலத்திற்குரிய பூஜை முறைகள் வழக்கமாக நடக்கும். ஏப்., 25ல் திருக்கல்யாண உற்ஸவமும் பக்தர்கள் இன்றி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.