விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என விருதுநகர் கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். அவரின் செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் இதை கருத்தில் கொண்டு சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. மேலும் கோவில்களில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என விருதுநகர் கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். முன்னதாக இக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.