பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
05:04
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், மரப்பாலம் சாலை, 2ல் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை மூலமந்திர ஹோமம், வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் சமகால அபிஷேகம், தச தரிசனம், தச தானம், அன்னதானம் ஆகியவை நடந்தது. இன்று முதல் மண்டல பூஜை தொடங்குகிறது.