திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2021 11:04
திண்டுக்கல்; சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் - பத்மகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 15 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலையில் நடந்த திருமணம் இக்கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வழக்கமாக மாலையில் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கூடுவதை தவிர்க்க நேற்று அதிகாலை 5:30 மணிக்கே நிகழ்ச்சிகள் தொடங்கின.மூலவர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை மற்றும் பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் நடராஜருக்கு சிறப்பு அபிஷகேம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமி, பிரியாவிடையுடன் காலை 6:30 மணிக்கு மேடையில் எழுந்தருளினார். திருமணச் சடங்குகள், பூஜைகள் தொடங்கின. சுவாமி, அம்பாளின் பிரதிநிதியான பட்டர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். மாங்கல்ய பூஜையைக்கு பின், பட்டர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். பிரியாவிடைக்கும் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.முக்கிய பிரமுகர்கள் தவிர பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 8:30 மணிக்கு பின்பு பக்தர்கள் தரிசிக்க அனு