பதிவு செய்த நாள்
25
ஏப்
2021
10:04
நத்தம்; நத்தம் அருகே கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மூலவர் மண்டபத்தில் அமைந்துள்ள நந்தி சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்நீர், விபூதி, புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. நந்தி சிலைக்கு மலர் அலங்காரம் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சாணார்பட்டி அருகே ஆதி சுயம்பீஸ்வரர், அபிராமி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடந்தது. அம்மனுக்கு கல்யாண சீர்வரிசை, தாம்பூழ தட்டுகளுடன் வலம் சென்று, சுவாமிகள் பட்டுடை அணிந்த கோலத்தில், மாலை மாற்றி திருக்கல்யாண வைபோகம் நடந்தது. சிவாச்சாரியார் உதயகுமார், அர்ச்சகர் வீரசபரி ஏற்பாடு செய்திருந்தனர்.சின்னாளபட்டி: இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்து, யாகசாலை பூஜைகளுடன், திருக்கல்யாணம் நடந்தது. மேலும் பாரதிநகர் விநாயகர் கோயிலில், மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர்.கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், சனிப் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.