சென்னை: கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் வாசலில் நின்றவாறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் பக்தர்கள் வெளியிலேயே நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.