ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா கமால். இவரது வீட்டருகே உள்ள காலியிடத்தில் வீடு கட்டுவதற்காக நேற்று காலை 9 மணிக்கு நிலத்தை தோண்டினார். அப்போது பூமிக்கடியில் சிலை புதைந்திருப்பதை கண்டு தகவல் கொடுத்தார். ராமநாதபுரம் தாசில்தார் அன்புநாதன், ஆர்.ஐ., பழனிக்குமார், கிராம நிர்வாக அதிகாரி மைதீன் ஆகியோர் முன்னிலையில் அம்மன் சிலை தோண்டி எடுக்கப்பட்டது. 2 அடி உயரம் 2 அடி அகமுள்ள இச்சிலையின் இரு புறமும் சிறிய அளவிலான சிலைகள் காணப்பட்டன. மீட்கப்பட்ட இச்சிலை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.