பதிவு செய்த நாள்
28
ஏப்
2021
05:04
கோவை : ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், டுவிட்டர் பதிவில், ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார். கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், துாத்துக்குடி, விழுப்புரம், கடலுார், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகள், அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, சத்குரு, தன் பங்களிப்பாக, 11.54 கோடி ரூபாய் வழங்கினார். இந்நிதி, அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது.