கோவை : கோவை மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் பரவலை தடுக்க, பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, தண்டு மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் இன்றி சக்தி கரகம் எடுத்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.