பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
03:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 34 நாட்களில், பக்தர்கள், 94.51 லட்சம் ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்தனர். பின், தங்களது வேண்டுதலை ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களாக, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.அந்த வகையில், கடந்த, 25ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின், கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் தரிசனம், ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த, 34 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம் மலைக்கோவிலில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 94 லட்சத்து, 51 ஆயிரத்து, 200 ரூபாய் ரொக்கம், 560 கிராம் தங்கம், 4,900 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.