பதிவு செய்த நாள்
13
ஜூன்
2012
10:06
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் வெங்கடாஜலபதி கோயிலில், ஜூன் 21 ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இங்கு, பத்மாவதி தாயார், வெங்கடாஜலபதி, லட்சுமி நரசிம்மர், தும்பிக்கையாழ்வார், பக்த ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் உள்ளன. ஜூன் 19 ல், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. வாஸ்து பூஜை, திசாபலி யாகம், தத்வ ஹோமம், பிராண பிரதிஷ்டை, நாடி சந்தானம் ஆகியவை நடக்க உள்ளது. பஞ்சராத்ர முறைப்படி ஜூன் 21 காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. திருவெள்ளறை பெரியகோயில் மிராஸ் கோபால கிருஷ்ண பட்டாச்சார்யார் சர்வ சாதக பூஜைகளை நடத்த உள்ளார். ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.