வால்பாறை: வால்பாறை, அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.வால்பாறை, அண்ணா நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவையொட்டிநேற்று காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.தொடர்ந்து, பக்தர்களுக்கு வீடு, வீடாக சென்று கோவில் நிர்வாகிகள் பிரசாதம் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.