திண்டிவனம்; திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.நேற்று 8ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீராமர்-சீதை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் ஊழியர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.