பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
04:04
கோத்தகிரி: கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக, குன்னூர் டி.எஸ்.பி., முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது.
படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகள் நியமனம் தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே, பிரச்சினை இருந்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்சனை குறித்து விவாதிக்க, பெட்டட்டி சுங்கம் மைதானத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர் தலைமை வகித்தார். குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், இருதரப்பில் இருந்து தலா, 15 பேர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரரும் எ பி என, இரு பிரிவுகளாக இல்லாமல், ஒருமனதாக சமாதானம் அடைந்தனர். இனிவரும் காலங்களில் கைகாரு சீமைக்கு உட்பட்டு, வழக்கம்போல் பழைய நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என, ஒருமனதாக முடிவெடுத்தனர். கூட்டத்தில், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைகாரு சீமைக்கு உட்பட்ட, 18 கிராமங்களில் இருந்து, தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.