வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் நாயகம். உலகில் எத்தனையோ நல்ல விஷயங்களும் உள்ளன. படுகுழியில் தள்ளும் தீய விஷயங்களும் உள்ளன. பொழுதுபோக்காக ‘டிவி’ யில் அறிவுப்பூர்வமான நல்ல நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். மனதை பாழ்படுத்தும் மெகா சீரியல்களையும் பார்க்கலாம். இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவர் வாழ்வில் நன்மை காண்பர். ஒருமுறை மக்களிடம், ‘‘உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது’’ என்றார் நாயகம். ‘‘அப்படியானால் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஏற்றுக்கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?’’ எனக் கேட்டனர்.. ‘‘யார் தமக்குரிய பொருளை இறைவழியில் செலவு செய்து நற்செயல்களை செய்கிறாரோ அவருக்கு சொர்க்கத்துக்கான பாதை காட்டப்படும். எவன் தம் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை நல்லவற்றை அலட்சியம் செய்கிறானோ அவனுக்கு துன்பம் மிகுந்த நரகத்தின் பாதை காட்டப்படும்’’ என்றார்.