ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றுபவர்கள் சூரியன் உதிப்பதற்குள் உணவு, தண்ணீர் தேவைகளை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த வைகறை உணவுக்கு ‘ஸஹர்’ என்று பெயர். அதிகாலை 4:00 – 4:30 மணிக்குள் ஸஹர் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். “நோன்பு துறப்பதை (இப்தார்) முற்படுத்துங்கள். ஸஹர் உணவைப் பிற்படுத்துங்கள்” என்கிறார் நாயகம். சூரியன் மறைந்த உடனே நோன்பை விட்டுவிட வேண்டும். சிலர் சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் துறக்காமல் பத்து நிமிடம் கழித்தே நோன்பு துறப்பர். இதை இஸ்லாம் கண்டிக்கிறது. ஏழை, எளியவர்கள் நோன்பு நோற்க விரும்புவார்கள். ஆனால் அவர்களிடம் அதிகாலையில் உண்பதற்கு வசதியிருக்காது. அப்படிப்பட்டவர்களின் ஸஹர் உணவுக்கு உதவ வேண்டும் என இஸ்லாம் ஆணையிடுகிறது. “ஸஹர் உணவில் அருள்(பரக்கத்) இருக்கிறது”