பெ.நா.பாளையம்: ஆனைகட்டியில் உள்ள டிங்கிள் சேவா மையத்தின் சார்பில், கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை நடந்தது. ஆனைகட்டி வட்டாரத்திலுள்ள ஆதிவாசி பழங்குடியினர் குழந்தைகள் கல்வி விழிப்புணர்வு பெற, பல்வேறு நிகழ்ச்சிகளை டிங்கிள் சேவா மையம் நடத்தி வருகிறது. சமீபத்தில் இம்மையத்தில் பழங்குடியின குழந்தைகள் சார்பில், கொரோனோ நோயாளிகள் விரைவில் குணமடையவும், அக்கிருமிகள் நாட்டைவிட்டு அகலவும், இறைவனை வேண்டி பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான பழங்குடியின குழந்தைகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.