குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி, அம்பலவாணன்பேட்டை பிரகன்நாயகி சமேத அம்பலவானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதே போன்று, புலியூர் அடுத்த வசனாங்குப்பம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் காலை 10:00 மணிக்கு நடந்தது. இரண்டு கோவில் விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.