மூணாறு: கேரளா மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரக கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் கிருஷ்ணன் ஆகிய கோயில் கட்டப்பட்டன. அவற்றின் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் தந்திரி கோவிந்தன் நம்பூதிரி தலைமையில் கும்பாபிஷேகம் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடந்தது. முன்னதாக கோயிலில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் பாதுகாப்பு குழு செயலாளர் மனோஜ் ஏற்பாடுகள் செய்தார்.