திருக்கோவிலூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில், திருக்கோவிலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஆன்மீக இளைஞரணி சார்பில், திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொறுப்பாளர் சக்தி பரத்குமார் வரவேற்றார். விஜயலட்சுமி கபசுர குடிநீரை வழங்கினார். ஸ்வேதா, செல்வம், சம்பத் உள்ளிட்ட வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.