பதிவு செய்த நாள்
01
மே
2021
03:05
வடவள்ளி: கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வருகின்றனர். மருதமலை அடிவாரத்தில், பஞ்சாமிர்தம், பூக்கடை, ஹோட்டல் என, 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மருதமலை அடிவாரத்தில் கோவிலுக்கு செல்லும் வழி பாதை கேட் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வராததால், மருதமலை அடிவாரம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சில பக்தர்கள் அடிவாரத்திலுள்ள படிக்கட்டு வழிப்பாதையில், கற்பூரம் ஏற்றி சுவாமியை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வராததால், அடிவாரத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி உள்ளது. இதனால், மருதமலை அடிவாரத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், அடைக்கப்பட்டுள்ளது.