பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் அனுமதியில் இல்லை. தற்போது அங்கு நூற்றக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. அவை தேவையான அளவு உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றன. இவைகளுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்கள் கொடுத்து பழக்கி உள்ளனர். இதனால் குரங்குகள் நகருக்குள் புகுந்து வீடுகளுக்கும் வரும் சூழ்நிலை ஏற்படும். எனவே கோயில் அதிகாரிகள் வனத்துறையுடன் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.