முத்தாலம்மன் கோயில் காளைக்கு பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2021 02:05
பாலமேடு: பாலமேடு அடுத்த பொந்துகம்பட்டி கிராம முத்தாலம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை 2005.,ல் உடல் நலக்குறைவால் இறந்தது. போட்டிகளில் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பல பரிசுகளை வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்த காளைக்கு கோயில் முன்பாக மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் வழிபாடு செய்கின்றனர்.நேற்று முன்தினம் கிராமத்தினர் காளைக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.