பெற்றோர் தங்களின் குழந்தைகள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்படுகின்றனர். சிலர் தான் பட்ட கஷ்டங்களை தன் குழந்தைகள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக குழந்தைகளிடம் தங்களின் கஷ்டத்தையே தெரியப்படுத்தாமல் மறைக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டம், ஆடம்பரமான வாழ்க்கை முறை என கட்டுதிட்டம் இல்லாமல் வளர்க்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சுய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். ‘‘ மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீனை பிடிக்க கற்றுக்கொடுப்பவனே அறிவாளி’’ என்பார்கள். வாழ்க்கையை உருவாக்கி கொடுப்பதை விட குழந்தைகள் சுயதிறமையை வெளி்ப்படுத்தி வாழ்வை உருவாக்க துணை நில்லுங்கள் என்பதே இதன் பொருள்.