இடாநகர்: பீகார் , உ.பி., ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்த படியாக புத்த மதத்தை தழுவிய நான்காவது மாநிலமாக அருணாசல பிரதேசம் திகழ்கிறது. மியான்மர் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் திபெத்திய புத்த மதத்தை தழுவியுள்ளனர் என ஹிமாலய கலாச்சார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மைய நிறுவனர் ரின்போக் கூறியதாவது: மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் புத்த கலாச்சாரை மையம் 25 ஆசிரியர்களுடன் இயங்கி வருகிறது. இங்கு பி.ஏ.பட்டமும், புத்த மத கொள்கைகளும் கற்பிக்கப்படுகிறது. தேசியஒருமைப்பாடை வளர்க்கும்விதமாக இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்முயற்சிகளில் ஈடுபட்டு்ள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நவ நாலந்தா தன்னாட்சி பல்கலைகழகம் மற்றும் சாரநாத், வாரணாசி , காஷ்மீர் மாநிலம் லே ஆகிய இடங்களில் மத்திய பல்கலை கழகம் புத்த மத படிப்புகளை கற்றுதருகிறது என தெரிவித்துள்ளார்.