Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி ... திருவொற்றியூர் தியாகராஜசுவாமி பிரதோஷ பூஜை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்லாமியர் பெயரில் சுமைதாங்கி கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
06:05

 உத்திரமேரூர்-பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தங்கள் வீட்டு கர்ப்பிணிகள், குழந்தை பிரசவிப்பதற்கு முன் இறக்க நேரிட்டால், அவர்கள் நினைவாக எழுப்பப்படுவதே, சுமைதாங்கி கல் என அழைக்கப்படுகிறது. இதில் இறந்த பெண்ணின் பெயர், ஆண்டு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.இவை, பெரும்பாலும் சாலையோர மரத்தின் நிழலிலும், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகிலும் நிறுவப்பட்டிருக்கும். வழிபோக்கர்கள், தங்கள் சுமையை இந்த கல்லில் வைத்து, இளைப்பாறி செல்வர். பிறர் சுமையை, கல்லில் இறக்கி வைப்பதன் மூலம், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைந்ததாக, தமிழர்கள் நம்பினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்றும் பல இடங்களில், சுமைதாங்கி கற்களில், தமிழ் பெண்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.இந்நிலையில், தமிழர்களைப் போல, இஸ்லாமியர்களால், 1936ல், உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரையில், ஆர்.தாவூத்கான் என்ற ஆண் பெயர் பொறிக்கப்பட்ட சுமைதாங்கி கல் இன்றும் உள்ளது.இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவதுஉத்திரமேரூரை சுற்றி பல இடங்களில் காணப்படும் சுமைதாங்கி கற்கள், பெண்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரையில் உள்ள சுமைதாங்கி கல், இஸ்லாமியர்களால் அமைக்கப்பட்டது மட்டுமல்லால், ஆர்.தாவூத்கான் என்ற ஆண் பெயரில் அமைக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் அரிதாக காணப்படும் சுமைதாங்கி கல்.பொதுவாக, இறந்த கர்ப்பிணிகள் நினைவாக எழுப்பப்பட்ட சுமைதாங்கி கல், நாளடைவில், அறச்செயலாக, அதாவது தர்ம காரியமாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்படும் பழக்கமாக மாறியது. அது போன்றதொரு சுமைதாங்கி கல்லாக இதை கருதலாம்.பழமைக்கு சாட்சியாய் வரலாற்றை சுமந்து நிற்ப தோடு, தமிழர்களைப் போல, இஸ்லாமியர் அமைத்த அரிய சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு; சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்து மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. ‘நவம்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்பது’ என்றும், ... மேலும்
 
temple news
உடுமலை;  குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி ; ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar