பதிவு செய்த நாள்
10
மே
2021
09:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், பால், பன்னீர், இளநீர், எலுமிச்சை, தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது, இதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மன், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.