பதிவு செய்த நாள்
10
மே
2021
11:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், கொரோனா ஒழிய வேண்டி,நந்தியம் பொருமனுக்கு பிரதோஷத்தின் போது 54 குடங்கள் நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஏப்.16ம் தேதி மூடப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல, நான்கு கால பூஜையும், பிரதோஷ வழிபாடும் வழக்கம் போல, பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.
இந்நிலையி்ல் பிரதோஷ தினமான நேற்று (09ம் தேதி), நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக, கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக்கப்பட்வர்கள் பூர்ண குணமடைய வேண்டியும், 54 குடங்கள் நீரை கொண்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவச்சாரியார்கள் தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.