புதுக்கோட்டை: விராலிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. பக்தர்கள் வசதிக்காக 4 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு வழியெங்கும் முருகன், சிவன், பார்வதி போன்ற சுவாமி சிலைகள் மான்,புலி, மயில். குரங்கு போன்ற விலங்குகளின் சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.கொரோனா தொற்று காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் இருந்த சிவன், பார்வதி, முருகன் சிலைகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் விராலிமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.