பதிவு செய்த நாள்
15
ஜூன்
2012
10:06
ஓசூர்: கெலமங்கலம் அருகே, பழமையான நாக முனீஸ்வரா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கெலமங்கலம் உள்ளுகுறுக்கி கிராமத்தில், 500 ஆண்டு பழமையான நாக முனீஸ்வரா கோவில் உள்ளது. இக்கோவில்பராமரிப்பு இல்லாமல் பாழடைந்தது. பக்தர்கள், இந்த கோவிலை முழுமையாக இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக கோவில் கட்டினர். இக்கோவிலில் ஆஞ்சநேயர், விநாயகர், முருகர் சிலைகளை வைத்து கோபுரங்கள் கட்டினர். கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி கோவிலில் விக்ரஹங்கள் கொண்டு வரப்பட்டு பல்வேறு ஹோம பூஜைகள் செய்தனர். நேற்று முன்தினம் இரவு விக்ரஹங்களை புதிய சன்னதியில் வைத்து பிரதிஷ்டை யாகமும், இரவு ரக்ஷபந்தன சிறப்பு ஹோமங்கள், அபிஷே பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு, புதிய கோவில் கலங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு நகரங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.