Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாக முனீஸ்வரா ஸ்வாமி கோவில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்மநாத ஸ்வாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
10:06

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமிக் கோவிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா நாளை(16ம் தேதி) காலை திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. 25ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்க வாசகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கிவரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சனத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா 16ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ராஜ அலங்காரத்தில் யோகாம்பிகை சமேதராக ஆத்மநாத சுவாமி திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தசமி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மசினகுடி பகுதியில், 20 ஆண்டுகளாக உலா வந்த மசினி அம்மன் கோவில் காளை உயிரிழந்ததால், உள்ளூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar