Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சௌந்திரராஜபெருமாள் கோவிலில் ... அறநிலையத்துறை சார்பில் உணவு வினியோகம் அறநிலையத்துறை சார்பில் உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயலின் நோன்பு நினைவலைகள்! (ரம்ஜான் ஸ்பெஷல்)
எழுத்தின் அளவு:
காயலின் நோன்பு நினைவலைகள்! (ரம்ஜான் ஸ்பெஷல்)

பதிவு செய்த நாள்

14 மே
2021
11:05

சங்கை மிகு ரமலான்... சாந்தி மேவும் ரமலான்... எங்கள் காயலின் ரமலான் மாதம் தனித்துவமானது. அழகானது. நினைத்தாலே தித்திப்பது!!
தலைபிறை பார்க்க போகும் இரவிற்கும் முந்திய மாலை நேரத்து கூட்டஞ்சோத்து பெருநாள் உலை கொதிக்கும் போதே ரமலான் நோன்பின் கலகலப்பு ஆரம்பமாகி விடும். அந்தந்த வட்டாரத்தில் வசிக்கும் வயது பெண்கள் ஒன்று கூடி வெட்டையில் செங்கல் அடுப்பு மூட்டி உலை வைப்பார்கள். முதல் பானை பொங்கியதும் கூடி இருக்கும் பெண்கள் எழுப்பும் குலவை ஒலி, தலைப்பிறையின் வருகைக்கு கட்டியம் கூறுவது போல் இருக்கும்.
அதன் பின் பிறை பார்க்கும் படலம். ஆண்கள் பள்ளிவாசலுக்கும் கடற்கரைக்கும் பிறை பார்க்க செல்ல, பெண்கள் அவரவர் வீட்டு மாடியிலும் வெட்டையிலும் தஞ்சம் அடைவோம். அபூர்வமாக தான் முதல்நாள் பிறை கண்களுக்கு தென்படும். சிலோன், கேரளாவில் பிறை கண்ட தகவல் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டும் நோன்பு தொடங்கி விட்டதாக பள்ளிவாசல்களில் அறிவிப்பார்கள். ரமலான் மாதத்தின் பிரதான விசேஷம் தராவீஹ் தொழுகை தான். ஆண்கள் பள்ளி வாசலுக்கு தொழ போவார்கள். ஒரு ஒரு வட்டாரத்திற்கும் பெண்கள் தொழ தனியாக ஒரு இடம் உண்டு. அதை தைக்கா என்று சொல்வோம். தைக்கா இல்லாத பகுதிகளில் ஏதேனும் ஒரு வீட்டில் தொழுகை நடக்கும்.
தொழுகை முடித்து வீட்டிற்கு வரும் வழியில் உங்கள் வீட்ல சஹர்க்கு என்ன சமையல்? என்பதே பிரதான உரையாடலாக இருக்கும். சிறு பிள்ளைகளும் தலை நோன்பு பிடிப்பார்கள் என்பதால் பார்த்து பார்த்து சமைப்பார்கள். அஹனி கறி, மிளகு கறி, பொரிச்ச கறி என்று, எதாவது ஒரு கறி வகையும் இளந்தயிரும், நார்த்தங்காய் ஊறுகாயும் தான் பொதுவான தலை நோன்பு சஹர் சாப்பாடாக இருக்கும்.சஹர் உணவிற்கான முன் தயாரிப்பு செய்து வைத்து விட்டு துாங்கப் போவது வழக்கம்.

ரமலான் மாதம் முழுவதும் பள்ளி வாசல்களில் சஹர் நேர விசேஷ ஒலிபரப்பு நடைபெறும். சஹர் முடிய, சரியாக பத்து நிமிஷம் உள்ளது என்ற அறிவிப்பைக் கேட்டதும், வேக வேகமாக தண்ணீர் குடிப்போம். நோன்பு நோற்பதற்கான நிய்யத்தை, நவ்வைத்து சவ்மஅதின் என்று அரபியிலும், தொடர்ந்து தமிழிலும் சொல்லி முடிக்கவும், பள்ளியின் சுபுஹ் பாங்கு ஓசை ஒலிக்கும்.முதல் ரமலான் நோன்பு நோற்கும் சிறு பிள்ளைகள் தான் அந்தக் குடும்பத்தின் அன்றைய கதாநாயகிகள். அதிலும் பெண் பிள்ளைகள் என்றால், கூடுதல் விசேஷம். பட்டுப் பாவாடை, நகைள் அணிவித்து அழகு பார்ப்பர். உம்மாக்கள் இப்தார் (நோன்பு துறப்பு) பண்டம் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட, வாப்பாக்கள் பிள்ளைகளை பஜார்க்கு அழைத்துச் செல்வர்.ஆறு மணி தாண்டி விட்டால், சிறார்களின் கண்கள், கடிகார முள்ளில் தான் இருக்கும். பாய் விரித்து மத்தியில் சுப்ரா விரிப்பர். பேரீச்சம் பழமும், தண்ணீரும் முதல்வரிசையில். கடற்பாசி கிண்ணங்கள், ரோஸ் மில்க் குடுவை, பதநீர் ப்ளாஸ்க் அடுத்தடுத்து வர, பாங்கு ஓசையை ஆவலாய் எதிர்பார்ப்போம். தொடர்ந்து, சூடாக்கிய கஞ்சி, வாடா வடை, பஜ்ஜி கூடவே தாளித்த தேங்காய் சட்னி இத்யாதிகள் வர, பாங்கோசைக்காக மனம் பரபரக்கும். தேவ கானமாய் அல்லாஹு அக்பர் பாங்கொலி செவியை வருட, பேரீச்சம் பழத்துடன் அருந்தும் முதல் மிடறின் தண்ணீர் அமிர்தம் தான். வாய் பிரார்த்தித்தாலும், கண் பண்டக் குவியலில் தான்.தாகம் தணிந்தது நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது என, வாப்பா சொல்லித் தந்த நோன்பு துஆவின் அர்த்தம் மனதில் ஓடும்.துஆ முடித்ததும் பண்டங்களை கபளீகரம் செய்ய ஆரம்பிப்போம். மஃரீப் ஒகத் முடிச்சிட்டு மிச்ச மீதியை தின்னுக்கலாம். போய் ஒளு செஞ்சி தொழுவுங்கோ உம்மம்மா ஏவ மனமில்லாமல் பாயை விட்டு எழும்புவோம். தொழுகை முடித்து, விட்ட குறைகளை சாப்பிடவும் இஷா பாங்கு ஒலிக்கும். மீண்டும் தராவீஹ் சஹர் ஏற்பாடுகள் பக்கீர் அப்பா கொட்டு நோன்பு பிடிப்பது, துறப்பது என்று முப்பது நாட்களும் அழகாய் பயணிக்கும்.
பதினைந்தாவது நோன்புக்கு மேல், பெருநாள் துணி வாங்க போவோம். பெருநாள்களில் மட்டுமே புதுத்துணி.

லைலத்துல் கத்ர் எனும் இருபத்தேழாவது நோன்பு இரவில் இருந்தே, பெருநாள் கொண்டாட்ட மனநிலை ஆரம்பித்துவிடும். தெருக்களில் புதிது புதிதாய் பட்டாசு ஸ்டால்கள், மிட்டாய் கடைகள் தென்படும். பஜார் டெய்லர் கடைகள் பரபரப்பாக இயங்கும். நோன்பு இருபத்தொன்பது முடிவில் மீண்டும் பிறை பார்க்கும் படலம். அன்றைய பிறை தான் மறுநாள் நோன்பா அல்லது பெருநாளா என்று தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் எந்த ஊரில் பிறை பார்த்தாலும் தகவல் வந்துவிடும். சிலோன் ரேடியோவில் பெருநாள் அறிவிக்கின்றனரா என்று காத்திருப்போம். தகவல்கள் சரியாக உறுதிப் படுத்தப்படாத நிலையில், மஹ்ழராவில் ஆலிம்கள் ஒன்றாக கூடி முடிவெடுப்பர்.
பெருநாள் என்று முடிவாகி விட்டால், பள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க ஆரம்பிப்பர். தக்பீர் சத்தம் கேட்டதுமே, பெண்கள் பெருநாள் சமையல் வேலைக்கு ஆயத்தமாக, சிறு பிள்ளைகள் குதுாகலமாக தெருவிற்கு வந்து ஒரே ஆட்டம் பாட்டம் தான்.எங்க ஊட்ல பத்து முட்டைல வட்டிலப்பம்... உங்க ஊட்ல எத்தனை முட்டைல...? பக்கத்து வீடுகளின் விசாரிப்புகளோடு ஆரம்பமாகும் சமையல், விடிய விடிய நடக்கும்.

வட்டிலப்பம், கோலி அப்பம் செய்வதற்கான தேங்காய் துருவும் கவிதா, வட்டிலப்பத்திற்கான முட்டையை லாவகமாக வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி ஊற்றிக் கொண்டிருக்கும் பெரிய லாத்தா, கறி அடைக்கான கறியை மசாலா அடுப்பில் வதக்கிக் கொண்டிருக்கும் உம்மா எல்லாம், சரியா செய்கின்றனரா என மேற்பார்வை பார்க்கும் உம்மம்மா... இப்படி சமையலறை காட்சிகள் நேரம் செல்ல செல்ல மாறிக் கொண்டே போகும்.நாட்டுக் கோழி கறி வாசமும், தோசை மணமும் சூழ அழகாய் விடியும் அந்த பெருநாள் காலை விடியற்காலையில், தலையில் துண்டை சுற்றிக் கொண்டு தக்பீர் முணுமுணுத்தபடி, தோசை வார்க்கும் எங்கள் உம்மா, பெருநாள் இரவுகளில் துாங்கி, ஒருநாளும் பார்த்ததில்லை!எல்லா பள்ளிவாசல்களில் இருந்தும், அல்லாஹு அக்பர் ஒலிக்க ஆரம்பித்தால், கூடவே நாங்களும் தக்பீர் சொல்லியபடி, தொழுகைக்கு ஆயத்தமாவோம். வாழை இலையில் தண்ணீர் தெளித்து, வாடி விடாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த மல்லிகைப் பூவைச் சூடி, புதுகம்மல், வளையல் அணியும்போதான மகிழ்ச்சியே அலாதி தான். கூடவே உறவினர்கள் பெருநாள் துட்டு வாங்கி, பத்திரப்படுத்துவதற்காக உம்மம்மா வைத்து கொடுத்த சின்ன வட்டுவப்பையும் உண்டு.தொழுகை முடித்து வந்ததும் சாப்பாடு தான். எங்கள் ஊர் பெருநாட்களில், பிரியாணி இடம் பெறாது. பெருநாள் பசார் தான். பாய் விரித்து பரத்தி வைத்திருக்கும் இடியாப்பம், பரோட்டா, கறி அடை, கோலியப்பம், நாட்டுக்கோழி கறி, கடாகறி, வட்டிலப்பம், ஜவ்வரிசி பாயாசம் வகையறாக்களை பார்க்கும் போதே, வாயில் நீர் ஊறும். முப்பது நாட்களில் பிடித்த நோன்பை முடித்து கொண்டாடும் விதமாய், எல்லா உணவுகளையும் வயிறார சாப்பிடுவோம்.மாலையில் உறவினர்கள் வருகை, கடற்கரை கந்துாரி கொண்டாட்டங்கள் என்று முடித்து வீட்டுக்கு வரும் போது மனம் நிரம்பிய உணர்வும், கூடவே அடுத்த பெருநாள் எப்போது வரும் என்று ஏக்கமும் ஏற்படும்!ரமலான் முபாரக்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
வடபழனி, ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் பல வகையான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் ஆயிரத்தில் ஒருவராக ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar