கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகத்துவமிக்க இஸ்லாமைதாங்கும் துாண்கள் ஐந்தாகும்ஒன்றுக்குப் பத்தாய், நுாறாய்ஆயிரமாய் நன்மைகள் தேடஇறையளித்த வாய்ப்பே ரமலானாகும்!நோன்பென்பதுதடுத்துக் கொள்ளுலேயாகும்!உண்ணுதல் பருகுதல்உடல் இச்சை தவிர்த்தல் வீண்பேச்சுவீண்கேட்பு வீண்பார்வையாவும் தடுத்துஆன்ம சுத்திகரிப்பு நிகழும்அற்புதப் பயிற்சிக்காலம் இதுவாகும்!தக்வா எனும் இறையச்சம்பரிபூரணமாய் நம்மில் பெருகஸஹர் துவங்கி இப்தார் வரைநல்அமல்கள் பல செய்துதராவீஹ் தொழுகையில்இரவுதோறும் நிலைநின்றுநன்மைகள் அறுவடை செய்வோம்!* வாய்க்குப் பூட்டுப்போட்டுதொண்டையைத் தாழிட்டுக்கொண்ட பின்வயிற்றுடன் உரையாடத்தொடங்கியது ரமலான்.* வறியவர்களின் பசியைஇயலாதவர்களின்கையறுநிலையைதுரத்தப்பட்ட ஆத்மாக்களின்கண்ணீரைமவுன மொழியில்துயரம் ததும்பப் பேசியது* பணிச்சுமைகளிலிருந்து விடுபட்டவயிற்றின் பேச்சுஆன்மாவுக்குப் புரியப் புரியகொடையின் கிளைகள்வெளியெங்கும் விரிந்துபசுங்கனிகள் பொழியத்தொடங்கின.ஈகையின் வேர்கள்மனித சஞ்சாரமெங்கும் ஊடுருவிப் பரவின.* ஈமானுக்கும் இக்லாசுக்கும்இடையேபரந்து விரிந்திருக்கும்ஸஹருக்கும் இப்தாருக்கும்இடையிலானசூட்சுமப் பெருவெளியில்பேரருளாளனின் கருணைச்சுடர்ஒளிர ஒளிரஉலர்ந்த நாவில் ருசிக்கத்தொடங்கியதுநோன்பின் அருஞ்சுவை!திறந்தேயிருக்கிறது ரய்யான் கதவுகள்* தீ நுண்மி காலத்து ஈகை மாதம்முகங்களுக்கு தான் கவசம்கரங்களுக்கு இல்லைகருணைகள் நிறைந்திருக்கும் ரய்யான்இதயங்களில்எப்போதும்திறந்திருக்கும் ரய்யான் கதவுகள்* அளவின்றி அள்ளிக்கொடுக்கும் ஜகாத்துகள்மறைமுகமாக எழுதிவிடும்மறுமையின் கணக்குகளைநம் கண்களிலிருந்து மறைக்கிறதுபிரகாசிக்கும் சுவனத்தின் ஒளி* முப்பது நாட்களின் அமல்கள்பெருநாள் தொழுகை முடிந்தமுலாகத்துகளின் ஸ்பரிசங்களில்பூத்திருக்கும் புன்னகைகளாகஇனி கடந்து போகட்டும்மனிதம் நேசிக்கும் காலங்களும்.