பாற்கடலில் இருந்து மகாலட்சுமி அவதரித்த போது ‘அஷ்ட திக் கஜங்கள்’ எனப்படும் எட்டு யானைகள் மங்கல நீராட்டின. இதன் அடிப்படையில் மகாலட்சுமிக்கு ‘கஜலட்சுமி’ என பெயர் வந்தது. பல்லவர் கால குடைவறைக் கோயில்களில் யானைகள் நீரை முகந்து நீராட்டும் நிலையில் மகாலட்சுமியை தரிசிக்கலாம். யானைகளின் பிளிறலை லட்சுமி விரும்பிக் கேட்கிறாள். பசுக்களின் பிருஷ்ட பாகத்தில் (பின்பகுதி) மகாலட்சுமி இருப்பதால், அங்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜிப்பர். இதனால் பசுக்களை ‘கோ லட்சுமி’ என்பர். கிரகப்பிரவேசத்தின் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். அட்சய திரிதியை நாளில் கோபூஜை, கஜ பூஜையை தரிசிப்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.