* லட்சுமி வழிபாட்டுக்குரிய நாட்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இதை மேற்கொள்வர். * ஆவணி வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்பர். அன்று முதல் நான்கு நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதை ‘மகா லட்சுமி நோன்பு’ என்பர். * கார்த்திகை மாத பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்பர். இந்நாளில் லட்சுமியை பூஜிப்பது சிறப்பு. * ஐப்பசி பவுர்ணமியன்று லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். * ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் வியாபாரிகள் லாபம் பெருக லட்சுமிபூஜை நடத்துவர். * புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது ேக்ஷாடச லட்சுமி விரதம். இதனால் பதினாறு பேறுகளைப் பெற்று மகிழலாம். * மாதம் தோறும் வளர்பிறை திரிதியை நாளில் லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். * அட்சய திரிதியை நாளில் லட்சுமி வழிபட்டால் பொன், பொருள் சேரும்.