பதிவு செய்த நாள்
15
மே
2021
02:05
விருதுநகர்: ரம்ஜான் திருநாளையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் தெருக்கள், வீடுகளில் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.ரம்ஜான் முன்னிட்டு ஏப்.,14ல் நோன்பு துவங்கிய இவர்கள் நேற்றுரம்ஜான் கொண்டாடிய நிலையில், அன்பு, பாசம், சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி , உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினர்.ராஜபாளையம்: சம்பந்தபுரத்தில் இஸ்லா மிய இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.செய்யது இப்ராகிம், முபாரக் அலி, டைகர் பர்னிச்சர் டைகர் சம்சுதீன்,முகமது சபிக் துவக்கிவைத்தனர்.பசீர், அக்பர் அலி, திவான் பாபு, ஹனிபா, சிராஜ், நாகூர் மைதீன், ரபீக் ஹஜ்ரத் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் பால மஸ்தான் , நிர்வாகிகள் சையது சமீர், சுபஹான் மைதீன், ரியாஸ் ரில்வான் செய்தனர்.