பதிவு செய்த நாள்
15
மே
2021
12:05
பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், அட்சய திருதியையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஒன்பது வகையான சிறப்பு அபிேஷகம் நடந்தது. பூ மாலைகள், வெட்டிவேர் மாலை, தங்க நிற ஐந்து ரூபாய் நாணயம் உள்ளிட்ட சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சியிலுள்ள கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.*உடுமலை நெல்லுக்கடை வீதியிலுள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து சவுந்தரவல்லிதாயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.